இன்றைக்கு நாம் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள், அதனடிப்படையில் உடல்நலம் பெறக்கூடிய முறைகளைப் பற்றி நாம் பேசப்போகிறோம்.
சித்தர்கள் உடம்பே ஆலயம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடம்புதான் மிகச்சிறந்த ஆலயம் என்பது சித்தர்களுடைய கூற்று. அதனால்தான் திருமூலர்
பாடலில் சொல்லுவார்..
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று சொல்லுவார். உடம்புதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம். அதையே சித்தர்கள் இன்னொரு பாட்டில் என்ன சொல்வார்கள் என்றால்,
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று சொல்லுவார். உடம்புதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம். அதையே சித்தர்கள் இன்னொரு பாட்டில் என்ன சொல்வார்கள் என்றால்,
“நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?” என்று சொல்லுவார்கள்.
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?” என்று சொல்லுவார்கள்.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே அதாவது நம்மை படைத்தது இறைவன்தான். நம் உடலில் இருந்து எல்லாவற்றையும் இயக்கக்கூடியது இறைசக்திதான். ஆக “உயிரே கடவுள்” என்ற உன்னத கோட்பாட்டை உணர்ந்து உடலை மேம்படுத்தக்கூடிய விசயங்களை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் பாடலின் கருத்து. என்னதான் சுவையாக செய்யப்பட்ட கறியாக இருந்தாலும் கூட அந்த கறியின் சுவையை நாம் சமைத்த மண்சட்டி அறியுமோ? என்ற பாடலில் கருத்து வைப்பார்கள். அந்த அளவிற்கு உயிரே கடவுள், உயிர் குடிகொண்டிருக்கும் உடம்பே ஆலயம் என்பது ஞானியர்கள் கூற்று.
உடலை எப்படி பேணிப் பாதுகாக்கிறோம் என்றால் சில நேரங்களில் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஏனென்றால் சாப்பிடக்கூடிய உணவுகளில் நாம் உணவு என்ற அடிப்படையில் எந்த உணவையும் சுவைப்பதில்லை. ருசி அடிப்படையில் சுவைக்கக்கூடிய ஒரு இயல்பு இருப்பதனால் இந்த உடம்பு மெல்ல மெல்ல அழியக்கூடிய ஒரு சூழலுக்கு உள்ளாகிறது. ஒவ்வொரு மனிதனுடைய சராசரி ஆயுள் என்று நம்முடைய சித்தர்களின் நூல் என்னசொல்கிறது என்றால், குறைந்த பட்சம் 120 ஆண்டுகள் நோயில்லாமல் வாழக்கூடிய தன்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் அந்த 120 ஆண்டுகளில் பாதியைக்கூட கடப்பதற்கு நம்மால் இயலாத சூழல் இன்றைக்கு இருக்கிறது.
அதற்குக் காரணம் என்னவென்றால் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பொருட்களை நாம் முழுமையாக மறந்துவிட்டது, வணிக நோக்கில் நம்மீது திணிக்கப்பட்ட பன்னாட்டு உணவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது, நாகரிக நோக்கத்தில் நம்முடைய பாரம்பரிய உணவு அறிவியலை முழுமையாக மறந்தது, நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை முழுமையாக மறந்தது, நம்முடைய அன்றாட வாழ்வியல் நியதிகளை முழுமையாக மறந்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நம்மீது சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நாம் உணவை மறந்தோம், நல்ல உள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை மறந்தோம். மோகத்தில் திளைக்கக்கூடிய சூழல் இருப்பதனால் இன்று நம் உடல் நோயுற்று, மெலிவுற்று, உலகிலேயே பிணிவுற்ற ஒரு தேசமாக இந்தியா இருக்கிறது என்றால் கண்டிப்பாக நாம்தான் அதற்குக் காரணம்.
ஆக உடற்பிணி நீங்கி நல்ல சிந்தனையோடு, உடல்நலத்தோடு வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். இது மிக முக்கியமான ஒரு விசயம். இந்த உடம்பானது பஞ்சபூத கலவையால் ஆன அற்புதமான தேகம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களின் அடிப்படையில் இந்த உடம்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடம்பை பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு சுவைகள் அவசியம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு போன்ற ஆறு சுவைகளும்தான் நம் உடம்பை பேணி பாதுகாக்கக்கூடிய சுவைகள் என்று சொல்ல வேண்டும். ஆக நம்முடைய உணவு என்பது நம் உடம்பிற்குத் தேவையான சுவைகளின் அடிப்படையில் எப்பொழுது பட்டியலிடப்படுகிறதோ அப்பொழுதுதான் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேடி நாம் நகர முடியும்.
எந்த வீட்டில் பார்த்தாலும் இட்லியும் தோசையுமே நிறவி இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அதாவது அந்த காலகட்டத்தில் பண்டிகை காலங்களில் மட்டுமே ஒவ்வொரு வீடுகளில் இட்லியையும் தோசையையும் பார்த்த காலம் போய், இன்று எப்பொழுது நினைத்தாலும் இட்லியையும் தோசையையும் போடக்கூடிய அளவிற்கு மாவை புளிக்கச்செய்து உடம்பை புளிக்க செய்யக்கூடிய உணவுமுறைகளை நாம் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆக குழந்தைகளிடம் வரக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை உடலில் புளிப்புத்தன்மை அதிகமாகி உடல் உப்பிப்போவது, உடல் பெருத்துப்போவது, குழந்தைகளுக்கே உள்ள உடல் வாகு இல்லாமல் போவதெல்லாம் இன்றைய சமூகத்தில் நாம் பரவலாக பார்க்கக்கூடிய ஒரு விசயம். ஆக இந்த புளிப்பு மிகுதியால் நடுத்தர வயதுடைய ஆண்களும் பெண்களும் சர்க்கரை நோய்க்கு உள்ளாக்கப்படுவது, சர்க்கரை நோய் வந்தபிறகு அதனடிப்படையில் வரக்கூடிய இரத்த அழுத்தம், இதயவியாதி, கல்லீரல் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், மூளை சார்ந்த பாதிப்புகள், நரம்பு சார்ந்த பாதிப்புகள் என்று இன்று சமூகத்தில் நிறைய வியாதிகள் நிறவிக்கிடப்பதற்கான காரணம் என்னவென்றால் நாம் அன்றாடம் எடுக்கக்கூடிய கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதுதான் என்பதை யாராலும் மறக்கமுடியாத, மறுக்க முடியாது. ஆக இந்த நிலை ஏன் வந்தது என்று பார்க்கும் பொழுது ஒவ்வொரு மனிதனும் ருசி அடிப்படையில் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடும் பொழுது இந்தத் தன்மை வரக்கூடிய சூழல் உண்டாகிறது. ஒரு உடம்பை நல்ல கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய சில மண்டலங்கள் தெளிவான நிலையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக நம் உடம்பை ஒழுங்காக கட்டுக்கோப்புடன் வைப்பதற்கு நம்முடைய எலும்பு மண்டலம் மிகப்பிரதானமானது. ஒரு மனிதனுடைய எலும்புகள், நரம்புகள், தசை இந்த மூன்றும் ஒழுங்காக இருக்கும்பொழுதுதான் ஒரு மனிதன் நல்ல உடல் கட்டோடு இருக்க முடியும். ஆக எலும்பை நன்றாக மேம்படுத்தக்கூடிய உணவுகளை நாம் தினசரி எடுக்கிறோமா என்றால் கண்டிப்பாக கிடையாது. எலும்பை மேம்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன? அன்றாடம் நமது உணவில் எலும்புகளை மேம்படுத்தக்கூடிய உணவுகளில் கண்டிப்பாக வெந்தயக்களியும், உளுத்தங்களியும் இருக்க வேண்டும். அன்றைய பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியதில் இந்த வெந்தயக்களி, உளுத்தங்களி எலும்புகளை நன்றாக வலுப்படுத்தக்கூடியது. பெண்களுக்கு வெந்தயக்களியும், ஆண்களுக்கு உளுத்தங்களியும் பிரதானப்படுத்தப்பட்டது. ஆக எலும்புகளில் பார்த்தால் கை எலும்பு, கால் எலும்பு, மூட்டு எலும்பு, முதுகெலும்பு, கழுத்து எலும்பு, மண்டை எலும்புகள், மார்பு எலும்புகள் பிரதானமானது உடம்பில்.
இந்த எலும்புகளை வலுப்படுத்தக்கூடிய தன்மை உளுந்தில் இருக்கும். இந்த உளுந்து எலும்பை வன்மைப்படுத்தும். அந்த உளுந்தை களியாகவோ, அடையாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிடும்பொழுது நல்ல பலன் கிடைத்தது. ஆனால் இன்றைக்கு உளுந்தை நாம் பிரதானப்படுத்தி செய்யக்கூடிய உணவுகள் மிகவும் குறைவாகிவிட்டது. ஆக எலும்பு பலவீனம் என்பது சர்வ சாதாரனமாக இருக்கக்கூடிய சூழல் உண்டாகியிருக்கிறது.
எலும்பு வன்மையைப் பொறுத்துத்தான் ஒரு மனிதனுடைய உடம்பில் நரம்புகள் வன்மையாக இருக்கும். நரம்பு வன்மையாக இருக்கும் பொழுதுதான் மனிதன் உடம்பில் சதைக்கட்டு என்பது சரியான முறையில் கட்டப்பட்டு இருக்கும். அதாவது தோல் பகுதியில் எந்த அளவிற்கு சதைக்கட்டு இருக்கவேண்டுமோ அந்த அளவிற்குத்தான் சதைக்கட்டுகள் இருக்க வேண்டும். அதே போல் வயிற்றுப்பகுதியில் எந்த அளவிற்கு சதைக்கட்டுகள் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்குத்தான் சதைக்கட்டு இருக்க வேண்டும். தொடைப்பகுதியில் எந்த அளவிற்கு சதைக்கட்டு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்குத்தான் சதைக்கட்டு இருக்க வேண்டும். ஆனால் நம்மிடையே பெரும்பாலானோருக்கு மாறுபட்ட சதைக்கட்டு ஏன் உருவாகிறது என்றால் கண்டிப்பாக நரம்பு தளர்ந்த மனிதனுக்குத்தான் அந்த சதைதளர்வு வரக்கூடிய சூழல் உண்டு.
எப்படி ஒரு வீணையில் நரம்பு ஒழுங்காக வலித்துக் கட்டப்பட்டுள்ள நிலையில் நாதம் ஒழுங்காக வெளிப்படுகிறதோ அதே மாதிரிதான் நம் உடம்பிலும் நரம்பு ஒழுங்காக வலித்து இழுத்து கட்டப்பட்ட சூழலில்தான் நம்முடைய செயல்பாடுகள் மிகவும் அற்புதமாக ஒழுங்காக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் வயிறை சுற்றி சதை போடுதல், தொடைப்பகுதி பெருத்துப்போகுதல், பின்புறப்பகுதி பெருத்துப்போகுதல் போன்ற சதை தளர்வு விசயங்கள் உண்டாக ஆரம்பிக்கும். சதை தளர்வு உண்டாகும் பொழுது நரம்புத் தளர்வு தானாக வர ஆரம்பித்து, ஒரு மனிதனுடைய அன்றாட இயல்பான உழைப்புத் திறன் குறையக்கூடிய ஒரு சூழல் உண்டாகும்.
ஆக ஒரு மனிதனுக்கு எலும்பு வன்மை, நரம்பு வன்மை, தசை வன்மை மூன்றும் முக்கியமான ஒரு விசயமாக கருதப்படுகிறது. இந்த எலும்பு, நரம்பு, தசையை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய நல்ல நிலையில் வைத்திருந்து உடலைப்பேணக்கூடிய விசயம் எதிலிருக்கிறது என்றால் உணவில் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய சரியான உணவில்தான் இருக்கிறது. ஆக ஒரு மனிதனுக்கு சராசரியாக இந்த எலும்பு, நரம்பு, தசை இந்த மூன்றையும் வலுப்படுத்தக்கூடிய உணவுகள் எது என்றால் இயற்கை உணவுகள். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்ற உணவுகளை எந்த ஒரு மனிதன் விடாமல் தொடர்ந்து எடுத்து வருகிறானோ அவனுக்குத்தான் இந்த எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம் இந்த மூன்றும் செம்மையாக இருக்கும். இந்த மூன்று மண்டலமும் செம்மையாக இருக்கக்கூடிய ஒருவனுக்குத்தான் ஜீரண மண்டலமே முறையாக இருக்கும். ஆக இந்த மூன்று மண்டலங்களை பலப்படுத்தக்கூடிய இயற்கை உணவுகள் என்ன என்ன என்ன என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.
– தொடரும்
Sir I’m not a habit of drinking milk……. How I take a amukkara ds??????? Pls tell …normally all are take this one….. Playing tell me
Take with normal water
34 yrs bald head already done hair transplantation but that hairs also gone is it possible to grow new hairs on forehead and centrepart
Come to direct contact 8608400035
Thank you very much for your basic information about Natural foods ………………….